Thursday, April 28, 2011

therthal padippinai


therthal padippinai



இலவசங்களை  பார்த்து மக்கள் மயங்குவதில்லை. இலவசங்கள் இல்லாத வங்கத்து தேர்தல் % விட இங்கு அதிகம். சென்ற தேர்தலில் கருணா ஜெயித்தது இலவசங்களால் இல்லை.
ஜெயித்தது negative வோட்டல்தான்
2. பணம்தான் வெற்றியை நிர்ணயிக்கிருது என்பதும் மாயைதான். இந்த தேர்தலில் முழுமையாக இல்லாவிட்டாலும்
பெருமளவு  கட்டுபடுதபட்டுது . இருந்தும்  வாக்குபதிவு புது உச்சைத்தை தொட்டு உள்ளது  சாரை சாரையாக மக்கள்
வோட்டு போட்டது பணம்தான் எல்லாம் என்பதை தகர்த்துள்ளது
3 கூட்டணி தர்மம் என்பது தேர்தல் அறிவிப்புக்கு பின்தான் அமலுக்கு வரும். தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போகும். தொடர்ச்சியாக ஜால்ரா
அடிசுகிட்டு கிளைகழகம் போல் செயல்பட்ட வைகோவை பாருங்கள்....
தேர்தல் விதிமுறைககுபின்  கூட்டணிக்கு வந்த pmk வைபாருங்கள் .
4 வடிவேலுக்கு வந்த கூட்டத்தை பார்த்து தப்பு கணக்கு போடக்கூடாது. 80 களில் சோ என்ற தனிமனிதனுக்கு வராத  கூட்டமா.ஆனால் தேர்தலில்
கிடைத்தது ஆப்புதான்
5 போலீஸ் வண்டிகளிலே பணம் கடத்துபடுவதாக election commission கோர்டிலேயே தெரிவிதபின்னரும் , இருவரும் அதை மேல்கொண்டு
கண்டுக்காமல் விட்டது தவறான முன்னுதாரணம் .அரசியலில் இதல்லாம் சகஜம் என்று இருக்க கூடாது.

திமுக வெற்றி பெற்றால் தலைவர்களின் அறிக்கை (ஒரு கற்பனை)


திமுக வெற்றி பெற்றால் தலைவர்களின் அறிக்கை (ஒரு கற்பனை)
கருணாநிதி: ஆரிய ஊடகங்களுக்கும் பதிரிகைகளிக்கும் தமிழக மக்கள் கொடுத்த மரண அடி இது. திமுகவின்
சாதனைகளுக்கு தமிழக மக்கள் கொடுத்த இலவச பரிசு இந்த வெற்றி. உடன்பிறப்புகளே (சோனியா & கோ) காலம் 'கனி'ந்து
உள்ளது. 'மொழி'க்காக திமுக எதையும் இழக்க தயார்.

மு.க.ஸ்டாலின்  : கலைஞர் தலைமையில் எங்களது செயல்பாட்டிற்கு கிடைத்ததுதான் இந்த வெற்றி. தென் தமிழகத்தைவிட வடடமிழமு. கத்தில் அதிக அளவு வெற்றியை
 ஈட்டு தந்த கழக கண்மணிகளுக்கு நன்றி.
மு. க. அழகிரி : இந்ததேர்தலே திமுகவிற்கும் தேர்தல் கமிஷன் இடையே தான். மக்கள் தேர்தல் கமிஷனுக்கு  மரண அடி
கொடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் கமிஷன் இல்லாமலே தேர்தல் நடத்த டெல்லி சென்றவுடன் மீரகுமாரியை
சந்தித்து மனு அளிப்பேன்.
தங்கபாலு : அன்னை சோனியா அறிவுரைப்படி இந்த வெற்றியை கலைஞரின் பொற்பாதங்களில் சமர்பிக்கின்றேன் .
காங்கிரச்சை வீழ்த்த நினைத்த சீமான்களுக்கும் (vasan&co) கோமான்களுக்கும் (chidambaram&co)  நான், அன்னையின்
அறியுரைபடியும் ராகுல் காந்தி அனுமதியோடும் சொல்லிகொள்வது 'என் சுண்டு விரல் அல்ல எந்த விரல் அசைத்தாலும்
 தமிழகமே பற்றி எரியும் '
ராமதாஸ் : வன்னியர்களின் அணுகு முறைக்கு  கிடைத்த மகத்தான வெற்றி இது. வன்னியர்களின் ஒத்துழைப்பு  இல்லாமல்  இனி தமிழ்நாட்டில்
 எந்த கட்சியும் ஆட்சிக்கு வராது. வன்னியர்கள் நமக்கு மட்டும் வோட்டு போட்டாலே அடுத்த தேர்தலில் 117 இடங்களை கைப்பற்றி வன்னியர் ஆட்சி அமைக்கலாம்
.(வன்னியர் = அன்புமணி)
வீரமணி: தமிழ் இன உணர்வுக்கு கிடைத்த வெற்றி இது. ராஜபக்சேக்கு எதிர்த்து கிடைத்த இந்த வெற்றியை U.N. உற்று
நோக்க வேண்டும்.
ஜெயலலிதா: (கொடநாட்டிலிருந்து அறிக்கை) தேர்தலில் தில்லுமுல்லு நடந்துள்ளது. கொட்டாம்பட்டி வோட்டு எண்ணும்
மையத்தில் இரண்டு காலி   த கரபெட்டிகள் கழக கண்மணிகள் கண்டு பிடத்ததே இதற்க்கு சாட்சி. தேர்தல் கமிஷன் ஐ எதிர்த்தும் குப்பைகளை வாரத
 திமுமைனோரிட்டிக அரசை எதிர்த்தும்,இன்று காலை 11  மணிக்கு வேட்பாளர்கள் அந்தந்த
தொகுதயில் மாபெரும் போராட்டம் ADMK  சார்பில் நடுத்துவார்கள்.
விஜயகாந்த்: மக்களே , கண்ட தண்ணியை குடித்து தொண்டை கெட்டுவிட்டதால் கடைசி இரண்டு நாட்கள் பிரச்சாரம் பண்ணாததால் நமக்கு தோல்வி.
 நான் எப்பொழுதும் உங்களோடுதான் கூட்டணி. 2016 ல் மட்டும் கட்சிகளோடு கூட்டணி.
வைகோ : ஆணவம் அழிந்தது. அகங்காரம் மறைந்தது. இனி திமுக அறிவிக்கும் எல்லா போராட்டங்களிலும் மதிமுக அழைப்பு இல்லாமேலே பங்காற்றி அறிய சேவை செய்யும்
. 2016 ல் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம்.
சீமான் : ஈழ  தமிழர்களின் குரல்வளையை பிடித்த தேர்தல் கமிஷன் யை  எதிர்த்து வீதி தோறும் எங்கள் முழக்கம் தொடரும். தேர்தல் கமிஷன் ஒழியும் வரை
 எங்கள் போராட்டம் தொடரும் .U.N. க்கு  பல்லாயிர கணக்கான  தந்திகள் பறக்கட்டும். (இந்த பேச்சிற்காக அவர் கைது செய்பட்டு சிறையில் அடைக்கபடுவர் என்பது தெளிவே)
சோ.  இலவசங்கள் கூட ஜெயவிடமிருந்து பெறமாட்டோம் என்ற தமிழக மக்களின் போக்கு ஒரு சாபக்கேடே. தமிழக
மக்களுக்கு திமுக ஆட்சியுடன் 2G scam  இலவசம்.
பெப்சி : 50  மாதங்கள் கலைக்கு அறிய சேவை செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளிவிழா பிரமாண்டமாக  நடத்தப்படும் . ரஜினி கமல் விஜய் அஜித் அனைவரும்
 கண்டிப்பாக கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து ஆசி பெறுவார்கள். சன் டிவி சார்பில் கலாநிதி மாறனுக்கு  சிங்கப்பூரில் ரஜினி தலைமையில் பிரமாண்ட பாராட்டு
தனியே நடைபெறும்.
சந்திரசேகரன்: தேர்தல் எனக்கு தெரியும் ஆனால் தேர்தல் முடிவு தெரியாது. கோபாலபுரம் எனக்கு தெரியும் ஆனால் போஎஸ் கார்டன் எனக்கு தெரியாது. விஜய் ஷூடிங்க்லே (யே)
 இருப்பதால் அவரின் அனுமதியோடு இதை நான் அறிவிக்கின்றேன்

THURSDAY, MARCH 31, 2011